சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை பார்வையிட்டு நலம் விசாரிக்கச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை.
சசிகலாவுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. அதனால் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
தேவைப்பட்டால் சசிகலாவுக்கு ஊடுகதிர் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.