ஆரம்பத்திலேயே கொரோனா பரவலை உலக நாடுகள் தடுக்க தவறி விட்டதாக, சர்வதேச நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் நியமித்த நிபுணர் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அதில், “கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதை கட்டுப்படுத்த சீனாவும், ஏனைய நாடுகளும் தவறி விட்டன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சீனாவில் பெரிய அளவில் கொரோனா பரவத் தொடங்கிய போதே சீனா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கூட்டம், கடந்த ஆண்டு ஜனவரி 22-ஆம் நாள் நடந்தது. ஆனால், சர்வதேச அவசரநிலையை அறிவிக்காமல் தாமதித்து, ஒரு வாரம் கழித்து அறிவித்தது.
கொரோனாவை ‘சர்வதேச பெருந்தொற்று’ என்று மார்ச் 11ஆம் நாள் தான் அறிவிக்கப்பட்டது.” என்றும் கூறப்பட்டுள்ளது.