குஜராத் அரசு டிராகன் பழத்தின் பெயரை, கமலம் என மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில், டிராகன் பழம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இந்தப் பழத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ள மாநில அரசு, கமலம் என புதிதாக பெயர் சூட்டியுள்ளது.
இது தொடர்பாக, கருத்து வெளியிட்ட குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ட்ராகன் பழம் என்ற பெயர், சீனாவை குறிப்பதாக உள்ளது என்றும், அது தாமரை போன்று உள்ளதாலும், கமலம் என பெயர் சூட்டினோம் என்று தெரிவித்துள்ளார்.