டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் ஜோ பைடனிற்கு சிறிய குறிப்பொன்றை விட்டுச்சென்றுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
பதவிவிலகும் ஜனாதிபதி புதிய ஜனாதிபதிக்கு குறிப்பொன்றை விட்டுச்செல்வது நீண்ட கால பாரம்பரியம் இருவரும் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாகயிருந்தால் கூட இது பாரம்பரியம் பின்பற்றப்படுகின்றது.
பராக் ஒபமா 2017 இல் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியவேளை டிரம்பிற்கு சிறுகுறிப்பொன்றை எழுதிவைத்துவிட்டு சென்றார்.
இது ரொனால்ட் ரேகன் ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் ஆரம்பமான நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.