ஸ்காபறோ ஒன்றாரியோ – சமஷ்டி லிபரல் கட்சியின் நாடாளுமன்றக் குழுஇ தைப்பொங்கல் தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு நாளை இணைய வழியில் வரவேற்பு விழாவொன்றை நடத்தவுள்ளது.
கொரோனா தொற்றுநோய் வேளையில் தமிழ்க் கனேடிய முன்களப் பணியாளர்களும் அத்தியாவசிய பணியாளர்களும் ஆற்றும் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விழா அமையவுள்ளது.
மாலை 7முதல் 8 மணிவரையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வினை முகநூல் நேரலையில் காண முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.