கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹரிஸ் ஆகியோருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டிய சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையுடனான ஆரம்பம் என்ற பைடனின் பேச்சையும் அவர்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றுள்ளனர்.
அமெரிக்காவுடனான இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும் என்றும் அவர்கள் தமது கீச்சகப் பதிவுகளில் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் மீள்திரும்பலை இனி எதிர்பார்க்க முடியும் என்று கனடிய எதிர்க்கட்சி அரசியல் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.