யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். போதனா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் ஆகியவற்றில், 708 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 18 பேரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.