சிறிலங்காவில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அனைத்துலக வானூர்தி நிலையங்களில் இரண்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 07.40 மணியளவில் ஓமானில் இருந்து முதலாவது வானூர்தி கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும், இராணுவத்தினரின் பாதுகாப்புடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க மற்றும் மத்தல வானூர்தி நிலையங்களே இன்று பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
எனினும், கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று அச்சம் காரணமாக, மூடப்பட்ட மூன்று அனைத்துலக வானூர்தி நிலையங்களில் பலாலி வானூர்தி நிலையத்தை திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
பலாலி அனைத்துலக வானூர்தி நிலையத்தை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.