கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்மூலம் குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும்.
எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்” என்றும், கூறியுள்ளார்.