அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம், உய்குர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெளியிட்ட பதிவு, தங்களது கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, தூதரகத்தின் கணக்கை கீச்சக நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
உய்குர் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் படத்துடன், “பெண்கள் ஒன்றும் குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம் அல்ல” என்று சீன தூதரகம் கீச்சகத்தில் பதிவிட்டிருந்தது.
ஒரு பெண்ணுடன் கணவனும், அவளது நான்கு குழந்தைகளும் காணப்பட்டும் புகைப்படம், கட்டாய குடும்ப கட்டுப்பாடு போன்ற தகவல்களை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீன தூதரகத்தின் இந்த பதிவு மனிதநேயமற்றது என்று விமர்சித்திருக்கும் கீச்சக நிறுவனம், தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி கணக்கை முடக்கியுள்ளது.