அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், குழாய்விரிவாக்கத்திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி இரத்துச் செய்தமையால் தமது மாகாணத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அந்த இழப்பினை ஈடு செய்யும் வகையில் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறும் கோரியுள்ளார். இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் சாதகமான தீர்மானத்தினை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்