உக்ரைனில், மூதாளர் பேணலகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் (Kharkiv) நகரில் உள்ள, 33 முதியவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் இரண்டாவது மாடியிலேயே நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மூதாளர் பேணலகத்தில் தங்கியிருந்த 33 பேரில், 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமர் ஜெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.