கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமத நிலைமைகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விரைவில் நிலைமைகள் சீரடையும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுச்சுகாதார தரப்பினர் இரண்டாவது மருந்தளவை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக பகிரங்கமாகவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.