கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைரொய்ட் போன்ற பிரச்சினைகளும் அவருக்கு இருப்பதால், உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும், மருத்துவமனை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர் குணமடைந்து வெளியே வர இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால், சசிகலாவின் விடுதலையில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வரும் 27ஆம் நாள் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ள போதும், கொரோனா தொற்று இருப்பதால் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.