சிம்பாப்வே வெளியுறவு அமைச்சா் சிபுசிஸோ மோயோ (Sibusiso Moyo) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
வெளியுறவு அமைச்சா் சிபுசிஸோ மோயோ (Sibusiso Moyo), சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார் என்று, சிம்பாப்வே அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வேயில், 37 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி றோபர்ட் முகாபேவுக்கு (Robert Mugabe) எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டம் வெடித்த போது, இராணுவ தலைமைத் தளபதியாக இருந்த சிபுசிஸோ மோயோ (Sibusiso Moyo) ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்து, முகாபேயை கைது செய்திருந்தார்.
அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், சிபுசிஸோ மோயோ (Sibusiso Moyo) வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்து வந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.