டொனால்ட் டிரம்பை பழிக்குப்பழி வாங்குவது தவிர்க்க இயலாதது. நிச்சயம் பழி வாங்கியே தீருவோம் என்று ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei ) தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஆட்சியில் இருந்த போது அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் மூலமாக ஈரான் புரட்சிகர ராணுவப் படைத் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், டிரம்ப் கோல்ப் விளையாடும் படத்தை தனது கீச்சக பக்கத்தில் பதிவிட்டுள்ள ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei ), உருது மொழியில் பதிவிட்டுள்ளார்.
பாக்தாத்தில் இருந்த சுலைமானியை தனது உத்தரவின் மூலமாக ஏவுகணை தாக்குதலில் கொலை செய்த டொனால்ட் டிரம்பை பழிக்குப்பழி வாங்குவது தவிர்க்க இயலாதது. நிச்சயம் பழி வாங்கியே தீருவோம் என்று அவர் அந்தப் பதிவில் எச்சரித்துள்ளார்