மக்களுக்கு தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொரன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரொரன்ரோ கன்வென்ஷன் சென்டருக்குள் வெளிநோயாளர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மருந்தகத்தின், உடனடியாக நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மாகாண அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இது குறைந்தது ஆறு வாரங்களுக்கு இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.