தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது.
இதன்படி, வர்த்தக சங்கம், ஏனைய சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தினர் உள்ளிட்டோர் தமக்கு ஆதரவு தரவேண்டும் என கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஆதரவு கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கையாகும்.
அத்துடன், கறுப்புக் கொடிகளைப் படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளதை அனுமதிக்க முடியாது” என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.