திட்டமிட்டவெளிநாட்டு பயணங்களை இரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ மீண்டும் வலியுத்தியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை பகுப்பாய்வு செய்த அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருமில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டுப்பயணங்களுக்கு திட்டமிட்டிருப்பதை அவதானித்தார்.
அந்த விபரங்களை கரிசனை கொண்ட பிரதமர் உடனடியாக திட்டமிட்ட பயங்களை கைவிடுமாறும், நாட்டின் நிலைமைகளை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே சர்வதேச வானூர்தி நிலையங்களின் ஊடாக கனடவிலிருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பயணிகள் தொடர்பான விபரங்களை பார்வையிட்ட பின்னர் கடுமையான வதிமுறைகள் அமுலாக்கப்படும் என்று பிரதமர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.