அனைத்து கனேடியர்களுக்கும் தடுப்பூசியை செலுத்தும் வகையில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் வந்து கொண்டுடிருப்பதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்தார்.
தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு சமஷ்டி லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழு இணையத்தில் நடத்தும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சமஷ்டி அரசாங்கம் நாடாளவிய ரீதியில் மில்லியன் கணக்கான தடுப்பூசியை முதற்கட்டத்தில் பெற்றுக்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் எதிர்வரும் காலத்தில் மேலும் பல மில்லியன் தடுப்பசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து கனடியர்களுக்குமான தடுப்பூசியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்வனவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்மூலம் விநியோக தடைகள் எதுவுமின்றி மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.