ரொரன்ரோவில், முன்னுரிமை பட்டியலில் இல்லாத எட்டு பேருக்கு இந்த வாரம் தடுப்பூசி தவறாக போடப்பட்டுள்ளதாக, நகர மேயர் ஜோன் ரொறி (Joan Rory) தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரொரன்ரோ கொன்வென்ஷன் சென்டரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திலேயே இவ்வாறு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இணைய வழிப் பதிவுகளின் போது, இந்த தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுகாதாரப் பகுதியில் முக்கியமாகப் பணியாற்றுபவர்கள் அல்ல என்றும், மெட்ரோ ரொரன்ரோவில் தடுப்பூசிகளைப் பெற வேண்டிய முன்னணி சுகாதாரத் தொழிலாளர்களின் குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.