கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தாயும், சேயும், அரசு மருத்துவமனையில் தவறாக நடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, மொங்கோலிய பிரதமர் குரேல்சுக் உக்னா (Khurelsukh Ukhnaa) பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அண்மையில் குழந்தையை பெற்றெடுத்த தாய் ஒருவர் கொரோனா பாதுகாப்பு உடைகள் இன்றி, சாதாரண உடையில் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அரசு மருத்துவத் துறையினர், கவனமின்றி நடந்து கொண்டதைக் கண்டித்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொங்கோலிய தலைநகர் உலான்பாடரில் (Ulaanbaatar) போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் குரேல்சுக் உக்னா (Khurelsukh Ukhnaa), தனது கவனக் குறைவினால் அந்த தாய் இவ்வாறு நடத்தப்பட்டதாகவும் இதற்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.