லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 43 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் திரிபோலி க்கு (Tripoli) மேற்கே கடற்கரை நகரான ஷவாராவில் (Zwara) இருந்து படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்ட போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிக எண்ணிக்கையான அகதிகள் படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில், நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதாகி நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 43 அகதிகள் உயிரிழந்திருப்பதாகவும், 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.