விவசாயிகளுடன் இந்திய மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, 57 நாட்களாக போராட்டம் நடத்தி வரும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு இன்று 11வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது,
இந்த கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் தோமர், விவசாயிகளுக்கு மதிப்பளித்து, சட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதனை விவசாயிகள் ஏற்று கொண்டால், அடுத்த கட்ட பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் இருந்து அவர் வெளியேறிச் சென்ற அவர் திரும்பி வரவில்ல.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விவசாயிகள் காத்திருந்து விட்டு வெளியேறிய விவசாயப் பிரதிநிதிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.