சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,
இதையடுத்து, அவருக்கு உடனடியாக பிசிஆர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அதன் முடிவு கிடைத்துள்ளதாகவும், அதன்படி அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்பட்ட பாணியை பவித்ரா வன்னியாராச்சி அருந்திய நிலையிலேயே அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகார அமைச்சில் 10இற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.