அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடரும் மாகாண பொதுசுகாதார தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தீனா ஹின்ஷா (Teena Hinsha) தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 21ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், ஏற்னவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவ்வாறே தொடரும் என அவர் கூறினார்.
எனினும் நீடிப்புக்கான காலவரிசையை பற்றி குறிப்பிடாத அவர் தற்போது இருக்கும் சுகாதார நடவடிக்கைகள் எதுவும் அகற்றப்படாது சுட்டிக்காட்டினார்.
கனடாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாகாணங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.