லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பொங்கலன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தற்போது வரை ரூ 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை புரிந்துள்ளது ஆக தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பல்வேறு பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் இப்படத்தின் வீடியோ பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் படம் வெளியாகி ஒரு சில வாரங்கள் கடந்து உள்ளதால் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி எனும் பாடல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.