சிரியாவின் ஹமா பகுதியை இலக்குவைத்து இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சிரியா தெரிவித்துள்ளது.
எனினும் பல ஏவுகணைகளை தனது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைகள் சுட்டுவீழ்த்தியுள்ளன என சிரியா தெரிவித்துள்ளது.
லெபனானிற்குள ஊடுருவுவதற்கு முன்னதாகவே தமது நாடு மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிரிய அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.