பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் முடிவு எடுப்பதற்கு ஒரு வார காலஅவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவுகளில்,
“ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு.
விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.