புதுடில்லியில் வரும், 26ஆம் திகதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற கோஷம் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய குடியரசு தினத்தன்று இடம்பெறவுள்ள இராணுவ அணிவகுப்பில், இராணுவத்தின், 861ஆவது ஏவுகணை பிரிவும் பங்கேற்கிறது.
அண்மையில் கொண்டாடப்பட்ட இந்திய இராணுவ தின அணிவகுப்பில், 861 ஆவது ஏவுகணைப் பிரிவு வீரர்கள், ‘துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்’ ஆகிய கோஷங்களுடன், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற கோஷத்தையும் எழுப்பியிருந்தனர்.
இதையடுத்து, டில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ கோஷத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.