ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை இரண்டு கோடியே 53இலட்சத்து 90ஆயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு இலட்சத்து 24ஆயிரத்து 177பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.