சிறிலங்கா கடற்படைப் படகு மோதியதில், கடலில் மூழ்கிய இந்திய மீன்பிடிப் படகில் இருந்த நான்கு மீனவர்களின் உடல்களும், கோட்டைப்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா கடலோரக் காவல்படையினரால், சர்வதேச கடல் எல்லையில் வைத்து, நான்கு மீனவர்களின் உடல்களும், இன்று முற்பகல் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினரின் முன்னிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
2 விசைப்படகுகளில் சென்ற 10 மீனவர்கள் சடலங்களைப் பொறுப்பேற்று, கோட்டைப்பட்டினத்துக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கிருந்து 4 அமரர் ஊர்தி வாகனங்களில், மீனவர்களின் உடல்கள் இராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன





