பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவின் வடகிழக்குப் பகுதியில் ஃபின்ஷாஃப் நகரத்தில் 36 கிலோமீற்றர் தொலைவில் 29.3 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.