எதிர்வரும் செப்டம்பருக்குள் அனைத்து கனடியர்களுக்குமான கொரோனா தடுப்பூசியை கிடைக்கச் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
கொள்வனவு ரீதியாக பல்தரப்பட்ட முகவர்களுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமைகளை தான் உணர்ந்துள்ளதாகவும் சமஷ்டி அரசாங்கம் இந்த விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
வெகு விரைவில் மூன்றாம் நன்காம் கட்ட கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசி தொகுதிகள் வானூர்தி மூலம் வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.