அயல் நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கிய இந்தியாவுக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் (covishield) , கோவக்சின் (Covaxin) ஆகிய கொரோனா தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைள இந்தியா அனுப்பியுள்ளது.
இந்திய அரசின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ் (adhanom ghebreyesus) கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அறிவை பகிர்ந்து நாம் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த இயலும். இதன்மூலம் பலரது வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.