உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று செயற்பட உள்ளார்.
ஹரித்துவார் மாவட்டத்தில்- தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி, ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் வேளாண்மை பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.
மேலும் அவர், உத்தராகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும் தாய் இல்லதரசியாகவும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம்மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்சனில் இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார்.