முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் தலைநகரின் மீதான தாக்குதலை அடுத்து, உள்நாட்டு பயங்கரவாதத்தின் ஆபத்து குறித்து முழு மதிப்பீட்டை நடத்துமாறு ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் எப்.பி.ஐ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து தேசிய புலனாய்வு பிரிவும் குறித்த திப்பீட்டை நடத்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜனவரி 6 ஆம் திகதி தலைநகர் மீதான தாக்குதல் மற்றும் நிகழ்ந்த துன்பகரமான மரணங்கள் மற்றும் அழிவு ஆகியவை நீண்ட காலமாக நாம் அறிந்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.