ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 359 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 52 மரணங்கள் சம்பவதித்துள்ளன. இதில் 25 மரணங்கள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளன.
நாடாளவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 இலட்சத்து 9 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான மேலும் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை 41 ஆயிரத்து 283 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.