சீனாவில் கிக்ஸியா (Qixia) நகரிலுள்ள தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கியவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சுரங்கத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளகள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உயிர் பிழைத்தவர்களுக்கு சிறிய துளை வழியாக உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், மீட்புப் படையினர் ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.