அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தகுதி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை, வரும் பெப்ரவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, ட்ரம்பை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
ட்ரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம், செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானத்தின் மீதான விசாரணை வரும் பெப்ரவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ட்ரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால் அவர், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.