ஒன்ராரியோவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்றாளர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு அங்குள்ளவர்களின் அன்புக்குரியவர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.
நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்ட போதும், தற்போது மரண வீதம் அதிகரித்திருப்பதானது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் செயற்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகள் மீள உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஒன்ராரியோ அரசாங்கம் இந்த விடயங்கள் பற்றிய தீவிர கவனத்தினைக் கொண்டுள்ளதோடு, விரைவில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.