அமெரிக்க ஜனாதிபதியுடனான பிரதமர் ரூடோவின் தொலைபேசி உரையாடல் சாதகமான நிலைமைகளையே தோற்றுவித்தள்ளதுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் பிறிதொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரும் தனது பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக கனடிய ஒளிபரப்பு நிலைய செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
குழாய் விரிவாக்கத் திட்டம் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையில் சில மனக்கசப்புக்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் இரு தலைவர்களும் அந்த விடயத்தில் கொள்கை ரீதியான விளக்கங்களை பரஸ்பரம் அளித்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் அயல் நாடான கனடாவுடன் பைடன் இணைந்த பயணத்தினை விரும்புவது போன்று ரூடோவும் சுமூகமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விளைவதாகவும் கூறியுள்ளார்.
கனடா, அமெரிக்க இடையேயாய வரலாற்று ரீதியான பிணைப்பினை முன்னெடுப்பதுடன் சவால்களை இணைந்து முகங்கொடுப்பதற்கும் இரு தலைவர்களும் இணங்கி உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.