ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை சிறிலங்கா புதன்கிழமை சமர்ப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த சிறிலங்கா அரசாஙகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கும் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிக ளில் இதுவரை நிறைவேற்றியுள்ளவை குறித்தும் அரசாங்கம் பதிலளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆதரவளிக்கு நட்பு நாடுகளையும் ஒத்த நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளையும் சந்திக்கும் செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.