கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உள்ளிட்ட மோல்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், துணைத் தளபதி பிஜிகே மேனன் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழு பங்கேற்றது.
இதன்போது எல்லையில் படைகளை விரைவாக திரும்பப் பெறுவது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்ப்பது, அனைத்து உடன்பாடுகளையும் மதித்து நடப்பது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.