தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், “சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது.
அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் சசிகலாதான்.
தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும்.
அதேவேளை, அ.தி.மு.க. உடனான கூட்டணி தற்போது வரை தொடர்கிறது.
தேர்தல் திகதி அறிவித்த பின்னர் தான், கூட்டணியை பற்றி பேச முடியும் என கூறுவது காலதாமதத்திற்குத் தான் வழிவகுக்கும்.
கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கினால் தான் வெற்றிக்கூட்டணியாக மாறும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.