நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை காங்கிரஸ் தான் கொலை செய்தது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், சாக்சி மகாராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
உன்னாவ் மக்களவை தொகுதி உறுப்பினரான, சாக்சி மகாராஜ், நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது,
“காங்கிரஸ் கட்சியே சுபாஷ் சந்திர போசைக் கொன்றது. மகாத்மா காந்தியோ அல்லது பண்டிட் நேருவோ அவரது புகழுக்கு முன்பாக நிற்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
‘இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் முக்கிய பங்கு வகித்தார். அவரது மரணம் ஏன் இன்னும் ஒரு மர்மமாக இருக்கிறது?
நேரு ஏன் எந்த விசாரணையும் நடத்தவில்லை? நேதாஜி மரணம் குறித்த உண்மை வெளிவர வேண்டும்’ என்றும் சாக்சி மகாராஜ் வலியுறுத்தியுள்ளார்.