பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை முடக்கத்தை நீட்டித்து அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உத்தரவிட்டுள்ளார்
இதனால் பிரித்தானியா மீண்டும் முடக்க நிலைக்கு தள்ளப்பட்டு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் பிரித்தானியா உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக இரத்து செய் துள்ளது.
உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜோன்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் முன்னெடுக்கப்படும் வரை முடக்கத்தைத் தளர்த்த வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது