தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு கல்கரி சட்ட அமுலாக்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் இருந்து நகர மற்றும் வட மத்திய கல்கரி ஆகிய இரு இடங்களிலும் 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சந்தேக மனிதர்கள் குறித்த விளக்கங்கள் மாறுபட்டிருந்தாலும், ஒரே ஒருவருடனேயே புகார்கள் தொடர்புடையவையா என்பதை உறுதிப்படுத்ததுவதற்கான விசாரணைகளை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க கல்கரி காவல்துறையினர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
அத்துடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.