ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டமையானது, ஏற்கனவே பதற்றமான சூழலில் உள்ள சிறிலங்காவுக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் சிக்கலானதாக மாற்றும் என்று, இராஜதந்திர வட்டாரங்கள் எச்சரித்துள்ளன
சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்தை அறிவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அனுப்பி வைத்திருந்த- கடுமையாக சாடும் அறிக்கையை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முன் ஒருபோதும் இல்லாத வகையில் பகிரங்கப்படுத்தியுள்ளது.
ஜெனிவாவில், சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர் உள்ளுர் ஊடகங்கள் மத்தியில் பெயரைப் பெறுவதற்காகவே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, அறிக்கையை பயன்படுத்த தீர்மானித்தார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் மிகவும் கடுமையான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாகும்போது ஏற்படக் கூடிய அரசியல் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்துடனேயே, அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது என்றும், வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.