மனித உரிமைகள் நிலை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவில் அண்மைய மனித உரிமைகள் நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியம் தமது கரிசனைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதேவேளை, இந்த மாத இறுதியில் சிறிலங்கா- ஐரோப்பிய ஒன்றிய கூட்டுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது,
இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்தும் ஏனைய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக இந்தக் கூட்டம் மெய்நிகர் முறையிலேயே இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.